மணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.!


திருச்சி: கலிகாலம்... இளசுகளின் அநியாயம் தாங்க முடியல... பாடம் சொல்லி தரும் டீச்சர் என்றுகூட பார்க்காமல்இ வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் மாணவர்கள் செய்த இந்த காரியம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறை அடுத்த ஆவாரம் பட்டி என்ற ஊரை சேர்ந்த பெண் ஒருவர்இ தனியார் பள்ளி ஒன்றில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவனும் ஆசிரியர்தான். ஆனால் வெளியூரில் பணியாற்றி வருகிறார். அதனால் ஆசிரியர் தனியாக வீட்டு எடுத்து தங்கி உள்ளார். ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த வீட்டின் பாத்ரூம் வெளியில் உள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு டீச்சர் குளித்து கொண்டிருக்கும்போதுஇ பாத்ரூம் ஜன்னலில் யாரோ ஒருவரின் கை மட்டும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டீச்சர்இ சத்தம் போட்டார். ஆட்கள் வருவதற்குள் அந்த நபர் ஓடி விட்டார். குளிக்கும்போது யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லையே என்று நினைத்து அச்சப்பட்டு கொண்டே இருந்தார்.
மிரட்டல் கடிதம்
பிறகு கொஞ்ச நாள் கழித்துஇ டீச்சர் வீட்டுக்குள் ஒரு மொட்டை கடிதம் வந்து விழுந்தது. அந்த துண்டு சீட்டில்இ 'நீங்கள் குளிப்பதை நான் வீடியோவாக எடுத்துள்ளேன். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து டீச்சரின் அங்கங்களை வர்ணித்தும்இ மச்சங்களை குறிப்பிட்டும் எழுதப்பட்டு இருந்தது. மேலும் இதை யாரிடமாவது சொன்னால் குளிக்கும்போது எடுத்த வீடியோவை வாட்ஸ்அப்இ பேஸ்புக் என எல்லாத்திலும் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டப்பட்டிருந்து.

11-ம் வகுப்பு மாணவன்
இதனால் பதறி போன டீச்சர் உடனடியாக தன் கணவருக்கு தகவல் தெரிவிக்கஇ இருவரும் சேர்ந்து வையம்பட்டி போலீசிலும் புகார் அளித்தனர். பிறகு போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது டீச்சரின் பக்கத்து வீட்டில் 11-ம் வகுப்பு மாணவன் குடியிருக்கவும்இ சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனை கூப்பிட்டு விசாரித்தனர்.
கையெழுத்து
பிறகு அவனுடைய நோட்டு புத்தகங்களை கொண்டு வந்துஇ துண்டு சீட்டில் உள்ள கையெழுத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். 2 கையெழுத்தும் ஒரே மாதிரி இருந்தது. பிறகு மாணவனிடம் விசாரணையை தீவிரமாக நடத்தியபோதுதான் விஷயம் புரிந்தது. தன்னுடன் படிக்கும் மேலும் 2 மாணவர்கள் சேர்ந்துதான் டீச்சர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்கள்.
3 பேரும் கைது
அத்துடன்இ இப்படி டீச்சர் குளிப்பதை இவர்கள் 3 பேரும் 2 வருஷங்களாகவே திருட்டுத்தனமாக பார்த்து வந்துள்ளார்கள் என்பதும்இ பிறகுதான் செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறினர். இதையடுத்து 3 மாணவர்கள் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் டீச்சரை இதுநாள் வரை மிரட்டி கொண்டிருந்த மாணவர்களின் செல்போன்இ மெமரி கார்டு என எல்லாவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.