பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்த நிலையில் நீண்ட நாட்களாகத் தலைமறைவாகியிருந்த இருவர் கைது-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த இருவரை ஏறாவூர்ப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஏறாவூர்ப் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (19.11.2018) மாலை கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து ஐயன்கேணி பகுதியில் வைத்து இச்சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐயன்கேணிப் பகுதியில் சமீப காலமாக வாள் வெட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயற்படுகள் இடம்பெறுவதாக ஏறாவூர்ப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.