தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'கஜ' புயல் தற்போது தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், ஏழு மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல் நாளை (வியாழக்கிழமை) இரவில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் கஜ புயல் தற்போது சென்னைக்குக் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டிணத்திற்கு வடகிழக்கே 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. தற்போது சுமார் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் இந்தப் புயல் நவம்பர் 15ஆம் தேதியன்று, அதாவது வியாழக்கிழமையன்று இரவில் கடலூருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயலின் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் 100 கி.மீ. வேகம்வரை காற்று வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்.
தற்போது இந்தப் புயல் பத்து கி.மீ. வேகத்தில் நகர்ந்துவந்தாலும் கரையை நெருங்க நெருங்க தரைப்பகுதி காற்றின் வேகத்திற்கு ஏற்ப இந்தப் புயல் நகரும் வேகம் மாறக்கூடும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.