ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பேரம் - துருக்கி தூதரகம் இணைந்து ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்  ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (09) வெள்ளிக்கிழமை கொழும்பு-07, ஹோர்டன் பிளேசிலுள்ள உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் துன்ஜா ஒஸ்துகாதர் கலந்து கொண்டதுடன்,  விஷேட பேச்சாளராக அகில இலங்கை ஜம் இயதுல் உலமா சபையின் இளைஞர் அமைப்பின் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் கலந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துருக்கி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக்கான துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையம் இந்த ஊடக உபகரணங்களை வழங்கியிருந்தது.

அங்கத்தவர்களிடமிருந்து பகிரங்கமாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம்  மீடியா போரம் மற்றும் துருக்கி தூதரகத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன தெரிவுக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஊடகவியலாளர்களுக்கும் 05ஊடக நிறுவனங்களுக்கும் இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நவமணிஎங்கள்தேசம்மீள்பார்வைடெலி சிலோன்ஆகிய நான்கு ஊடக நிறுவனங்களுக்கும் கமெராக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்கு மடிக் கணனி மற்றும் கமெராவும் வழங்கப்பட்டன.

கௌரவ அதிதிகளாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாநகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்நுஆ கட்சியின் தலைவர் அஸாத் ஷாலிமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர்மாக்கார்புரவலர் ஹாசிம் உமர்பலஸ்தீன்ஈரான்பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜம்இயத்துஷ் - ஷபாப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி கிராஅத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைக்க,வரவேற்புரையை போரத்தின் உப தலைவர் அஸ்கர் கானும்தலைமையுரை என்.எம். அமீன்,  விஷேட உரை அகில இலங்கை ஜம் இயதுல் உலமா சபையின் இளைஞர் அமைப்பின் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் நன்றியுரையை பொதுச் செயலாளர் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹானும் வழங்கினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.