மட்டக்களப்பு வாகரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உலருணவு வழங்கி வைப்பு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு வாகரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து வழங்கி வைக்கும் சேவையில் ஞாயிற்றுக்கிழமை 11.11.2018 ஈடுபட்டிருந்தனர்.கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்தமையினால் அதிலிருந்த மக்கள் பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.