டாக்டர் அஸாத் எம் ஹனிபாவின் தம்பியார் கவிதை நூல் வெளியீட்டு விழா


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18) ஞாயிற்றுக் கிழமை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் சபா ஜெயராசா கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன்நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என். எம். அமீன்உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர் செந்தில் வேலவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்த,  நூலின் முதல் பிரதியை இலக்கிய புரவலர்  ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார். தம்பியார் நூலின் நயவுரையை சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தியதோடுகாவ்யாபிமானி கலைவாதி கலீல் கவி வாழ்த்து பாடினார். வசந்தம் எப்.எம். வானொலி அறிவிப்பாளர் கவிஞர்  ஏ.எம். அஸ்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில்பிரதம அதிதியை நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளைஸ்ரீலங்கா முஸ்லிம்  மீடியா போரம் சார்பாக அதன் தலைவர் என்.எம். அமீனினால் டாக்டரும் கவிஞருமான அஸாத் எம் ஹனிபா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக நூலாசிரியரோடு பணிபுரியும் டாக்டர்கள்குடும்பஉறுப்பினர்கள்ஊடகவியலாளர்கள்கவிஞர்கள்எழுத்தாளர்கள்கலைஞர்கள்வாசகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். பகல் போஷனத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.