காத்தான்குடியிலிருந்து போலி றிசாலா FM, TV அத்துமீறிய சிலரின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு சட்ட நடவடிக்கை விரைவில் ஊடகப் பணிப்பாளர் . கபீர் -எம் -ஹஸன்


றிசாலா மீடியா வேர்ல்ட்டின் றிசாலா FM கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் சிறந்து விளங்கியதை யாவரும் அறிவீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது றிசாலா FM தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள  றிசாலா ஒரு பதிவு செய்யப்பட்ட பெயராகும் அதனை யாரும் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் .

அண்மைக்காலமாக சிலர் றிசாலாவின் பெயரை பயன்படுத்த முயற்சிப்பது எம்மால் அவதானிக்கப்பட்டு வருகிறது தற்போது றிசாலா என்ற பெயரை உபயோகித்து முகப்புத்தகத்தில்  FM, TV என ஏதேதோ செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களின் செயல்பாடுகளுக்கும் பணிப்பாளராகிய எனக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என்பதை எமது ஊடக நேயர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துமீறிய இவர்களின் செயல்பாடுகளை  கண்டிப்பதோடு. எதிர்காலத்தில் குறித்த சாராருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்வது பற்றி எனது சட்டத்தரணிகளோடு ஆலோசனை நடத்தி வருகின்றேன். தற்போதய போலி றிசாலாவிற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

கபீர் -எம் -ஹஸன் . ஊடகப் பணிப்பாளர் .
றிஸாலா மீடியா வேர்ல்ட் பீ எல் ஸி,


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.