ஆபத்தான நிலையில் காத்தான்குடி மத்திய கல்லுாரி பாடசாலை பார்வையாளர் அரங்கு...... கண்டு கொள்வார்களா பாடசாலை அபிவிருத்திக் குழு


(ஊடகவியலாளர் ஏ.எல்.டீன்பைரூஸ்)

பாலர் பாடசாலை மற்றும் பொது நிகழ்வுகளுக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும்     காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானம் மற்றும் அதன் பார்வையாளர் அரங்கு இன்று மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளதாக  பலரும் கவலை தெரிவிக்கின்றனர். 


காத்தான்குடி வரலாற்றில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த பார்வையாளர் அரங்கம் என  எல்லோராளும் பேசப்பட்டு வரும் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மைதானத்தின் பார்வையாளர் அரங்கின்  இன்றைய நிலையே இது......... கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக இயற்கை அனர்த்தம்,சூறாவளி.சுனாமி, காற்று மழை என சகலவற்றிக்கும் தாக்குபிடித்து வந்த மேற்படி கட்டிடம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.


பல்வேறு அபிவிருத்திகளை கண்டு வரும் மேற்படி பாடசாலை இது விடயத்தில் மாத்திரம் ஓரம்கட்டப்படுவதேன்......?
அரசியலில் வரலாறு படைத்துச் சென்ற டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் நாமம் பொறிக்கப்பட்டிருப்பதனாலா....?எது எப்படியோ பாடசாலை மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்படி பார்வையாளர் அரங்கம் விடயத்தில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் கூடிய கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.  காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர், பழைய மாணவர்கள் சமூகமே இது உங்கள் கவனத்திற்கு!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.