பொது மக்களுக்கான சேவைகளை அமைச்சின் ஊடாக விரைவுபடுத்துக! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு பணிப்புரை

Turn off for: Tamil


முன்னேடுக்கப்பட்டுள்ள உத்தேச நீர் வழங்கல் திட்டங்களை மக்கள் பயனடையும் விதத்தில் விரைவாக பூர்த்தி செய்து, கையளிப்பதற்கு ஒத்துழைக்க முன்வருமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, அதன் கீழ் செயற்படும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் மத்தியிலான கலந்துரையாடலொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (12) நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வி.ஹப்புஆராச்சி, இராஜாங்க செயலாளர் சந்திரா விக்கிரமசிங்க, மேலதிக செயலாளர்களான ஏ.சி.எம்.நபீல், எல். மங்கலிகா, முஸ்லிம் சமய பணிப்பாளர் ஏ.பி.எம்.அ~;ரப்,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமன சேகர மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொது மக்களின் மிக அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சேவை அடிப்படையில் செயற்பட்டுவரும்  நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபைக்குப் பொறுப்பான அமைச்சராக பதவி ஏற்க கிடைத்தமை குறித்து பேருவகை அடைகிறேன். 
ஊடகம், தொலைதொடர்பு, வீதி அபிவிருத்தி முதலான விடயங்களை கவனிக்கின்ற அமைச்சுக்களில் பணியாற்றியுள்ள போதிலும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவராக 2000ஆம் ஆண்டு கடமையாற்றிய ஒருவருட காலத்துக்குள் மக்களுக்கு பாரிய அளவு சேவை செய்ய முடிந்தமை குறித்து பெரிதும் திருப்தியடைகிறேன்.இக்கலந்துரையாடலின் போது நீர் வழங்கல் கருத்திட்டங்களின் செயற்பாடுகள் கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டங்கள், சமூக நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கருத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் இவ்வமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.