மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் அமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் புட்செல் சுற்றுப்போட்டி




மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் அமீரகக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை டுபாய் பில்வா இந்தியன் பாடசாலை மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் அமீரகத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கிய பாடசாலைகளின் அமீரக கிளைகள், இலங்கை சார் ஒன்றியங்கள் மற்றும் அணிகள் கலந்து சிறப்பித்தன. 
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் சுமார் 16 அணிகள் பங்கேற்றதுடன், நான்கு பிரிவுகளாக குழுக்கள் அமைக்கப்பட்டு இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன. இதில் யுனைட்டெட் ஸ்டார்ஸ் அணி சாம்பியனாக தெரிவானதுடன், சிலோன் செலன்ஜர்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 



இந்நிகழ்வுக்கு மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் நிஸாம் மற்றும் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அல்-ஹாஜ் இக்பால் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் அமீரக கிளையின் விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்படி சுற்றுப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டதுடன், இதன் அறிமுக நிகழ்வு கடந்த 2.11.2018 அன்று Holiday Inn Express Dubai Airport Hotel வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.