சீனாவில் 80 நாட்களாக தனது உரிமையாளருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது

தனது உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் அந்த நாயின் புகைப்படம் 1.4 மில்லியன் பேரால் ஆன்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளர் ஆகஸ்டு 21ஆம் தேதி மரணமடைந்தார். அன்றிலிருந்து அந்த நாய் தினமும் நடுரோட்டில் வந்து காத்து கிடக்கிறது.
சிலர் அந்த நாய்க்கு உதவ முன்வந்தனர். ஆனால் அந்த நாய் ஓடி விடுகிறது என டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
"ஓட்டுநர்கள் அந்த சின்ன நாய்க்கு உணவு வழங்க முயற்சிகின்றனர் ஆனால் அது ஓடி விடுகிறது."
"அவரின் உரிமையாளருக்கும் அந்த நாய்க்குமான உறவு மிகவும் ஆழமானது. உரிமையாளர் கொல்லப்பட்டதும் அந்த நாய் தினமும் தெருவில் வந்து நிற்க தொடங்கியது."
"ஒவ்வொரு நாளும் இது தெருவில் வந்து நிற்கும்போது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது." என்கிறார் அந்த டாக்ஸி ஓட்டுநர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.