73ஆவது அகவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று  ஞாயிற்றுக்கிழமை (18) தனது 73 ஆவது பிறந்ததினத்தைக் தனது குடும்ப உறவினர்களுடன் சந்தோசமாகக்  கொண்டாடினார்.
அவரின் 73ஆவது பிறந்ததினம் அவர் பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமையே இத்தினம் வருவது மகிழ்ச்சி தருகின்ற விடயமாக இருக்கின்றது. 
அவரின் வாழ்க்கை குறிப்பைச் சற்று புரட்டிப் பார்த்தால்...
நாட்டின் அதிமேதகு பிரதமர்பேர்சி மகேந்திரா ராஜபக்ஷ எனும் இயற்பெயரைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ  1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென் மாகாண அம்பாந்தோட்டையில் உள்ள வீரக்கெட்டிய என்ற ஊரில் புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார்.
தென் மாகாணம்காலி மாவட்டம் - காலி நகரில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றான ரிச்மண்ட் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைக் கற்ற இவர்பின்னர் கொழும்பு நாளந்தா கல்லூரியிலும்தேர்ஸ்டன் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பயின்றார்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிய இவர்பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, 1977 நவம்பரில் சட்டவறிஞராகிதங்காலையில் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 1970 மே 27 ஆம் திகதி பெலியத்தை தொகுதி மூலமாக அரசியலுக்குள் நுழைந்துமுதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி,  2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும்வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஜனாதிபதியாக தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம் ஊடாக  2005 நவம்பர் 19 இல் தொடங்கி, 2010 ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவில் இரண்டாம் தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு  தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க முடியாமல் 2015 ஜனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் 2015 பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
இவரது தந்தையாரான டி.ஏ. ராஜபக்ஷபண்டாரநாயக்க அரசில் பிரதி சபாநாயகராகவும்தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது மாமனாரான டி.எம். ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930 களில் பதவி வகித்து வந்தவர்.
சிறுவர் உளவியலாளரும்கல்வியியாளருமான சிரந்தி விக்கிரமசிங்கவை 1983 இல் கரம் பிடித்தார். இவரது தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி. இவர்களுக்கு நாமல்யோசிதரோகித என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் பாராளுமன்ற உறுப்பினராகவும் யோசித இலங்கைக் கடற்படையிலும் பணியாற்றியவர்கள்.
01 மே 1993 இல்  முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 19 ஆகஸ்ட் 1994 - 1997 வரை டிங்கிரி பண்டா விஜயதுங்கவும் அதன் பிறகு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதியாக இருந்த போது தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகவும், 19 ஒக்டோபர் 2000 - 14 செப்டம்பர் 2001 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும், 6 பெப்ரவரி 2002 - 2 ஏப்ரல் 2004 வரை  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த வேளையில் (அப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க) 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும், 22 ஏப்ரல் 2004 -- 19 நவம்பர் 2005 வரை நெடுஞ்சாலைகள்துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
19 நவம்பர் 2005 - 15 ஜனவரி 2015 வரை 5 ஆவது இலங்கை சுதந்திரக் கட்சித் தலைவராகவும் 19 நவம்பர் 2005 - 9 ஜனவரி 2015 வரை 6ஆவது இலங்கையின் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்ற இவர், 19 நவம்பர் 2005 - 8 ஜனவரி 2015 வரை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், 23 நவம்பர் 2005 - 9 ஜனவரி 2015 வரை நிதி அமைச்சராகவும், 23 ஏப்ரல் 2010 - 8 ஜனவரி 2015 வரை நெடுஞ்சாலைகள்துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராகவும், 26 ஆகஸ்ட் 2013 -  8 ஜனவரி 2015 வரை சட்டம் மற்றும் ஒழுங்காற்றல் அமைச்சராகவும் நாட்டு மக்களுக்குச் சேவை செய்துள்ளார்.
1 ஆகஸ்ட் 2008 - 3 ஆகஸ்ட் 2008 வரை 15 ஆவது சார்க் அமைப்பின் தலைவராகவும், 15 நவம்பர் 2013 - 9 ஜனவரி 2015 பொதுநலவாய அமைப்புகளின் 11ஆவது தலைவராகவும் பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடுஎத்தனையோ ஜனாதிபதிகள்பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்த போதிலும் யாருமே செய்யாத, 30 வருடமாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவரலாறு பேசும் அளவுக்கு ராஜ தலைவன் என்ற நாமத்தை பதித்தவர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றியவர். மற்ற சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர்கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
மற்ற சகோதரர் பஷில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர்.
 மஹிந்த ராஜபக்ஷ, 1994 - 2004 வரை மக்கள் கூட்டணியிலும், 2004 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலும், 2016 இலங்கை பொதுஜன முன்னணி மூலமாகவும் தேர்தலில் போட்டியிட்டார்.
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 2018 ஒக்டோபர் 26 முதல் இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமனம் செய்ததையடுத்துஇவர்தற்போது பிரதமராகப் பதவி வகிக்கின்றார்.
நாமும் எமது வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.