கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானம் விவசாயம் மற்றும் கலை கலாசார பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் 29ஆம் திகதி ஆரம்பம்-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானம் விவசாயம் மற்றும் கலை கலாசார பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக் கழக விடுதி வசதியுள்ள மாணவர்கள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதிகளுக்கு திரும்பலாம் எனவும் அவர் கூறினார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீடம் 2016-2017 முதலாம் வருடம் 2ம் தவணை.

விஞ்ஞான பீடம் 2013-2014 மூன்றாம் வருடம் 2ம் தவணை.

இரசாயனவியல் 2011-2012 விசேட நான்காம் வருடம் 1ம் தவணை

விவசாய பீடம் 2013-2014 நான்காம் வருடம் 1ம் தவணை

ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே எதிர்வரும் 29ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.