2019 தேசிய மீலாத் விழா தர்கா நகரில் நடைபெறும்! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு2019ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா களுத்துரை மாவட்டத்தின் தர்கா நகரில் நடைபெறும் என முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று  (26.11.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 2018 தேசிய மீலாத் விழா இன்று கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல்,  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்   அஷ்ஷேய்க்   எம்.ஆர்.எம்.மலிக், இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஸ{ஹைர் எம்.எச். தார் ஸைத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட் ஸாஹிட் ஸ{ஹைல் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது, தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.