20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இயந்திரங்கள் சிங்கப்பபுருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தினால் வழங்கிவைப்பு.

ஏ.எல்.டீன் பைரூஸ்

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சாவின் வேண்டு கோளுக்கிணங்க சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இயந்திரங்கள்   சிங்கப்பபுருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தினால் வழங்கிவைப்பு.
கடதாசி.மட்டைதாள்கள்  மூலமாக அன்றாடம்  பயன்படுத்தப்படும் பேப்பர்கப், பேப்பர்பிலேட், மற்றும் பம்பஸ் உட்பட மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய பெறுமதி வாய்ந்த இரண்டு இயந்திரங்களை  சிங்கப்புருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் உதவியுடன் நாம் பெற்றுக் கொண்டதன் ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள் பலருக்கு இதனுாடாக தொழில் வாய்ப்பினை பெறு்றுக் கொடுக்க முடியும் என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  சல்மா ஹம்சா தெரிவித்தார்.


இவ்வாறான இயந்திரங்களை வழங்குவதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன் வறுமைக் காட்டின் கீழ் வாழும் பெண்கள் குறிப்பாக சகல இன பெண்களையும் உள்வாங்கியதாக எதிர்காலத்தில் இவ்வாறான தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்ட  சிங்கப்பபுருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத் தெரிவித்தார்.

நிகழ்வின் காத்தான்குடி நகர முதல்வர் எஸ.எச்.எம்.அஸ்பர், சிங்கப்பபுருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்தின் பாரியார் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இயந்திரத்திற்கான உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டன.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.