வறிய குடும்பங்களைச் சேர்ந்த 143 மாணவர்களுக்கு மாதாந்த உதவு தொகை


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் புலமை காட்டி, உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்பு உதவு  தொகை  வழங்கும் நிகழ் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இதில் பெரண்டினா தொழில் வள நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட  வறிய குடும்பங்களைச் சேர்ந்த 143 மாணவர்கள் தமக்கான  மாதாந்த உதவு தொகையாக 1000-1500 ரூபாவுக்கான தகைமைச் சான்றிதழையும் வழிகாட்டல் விழிப்பூட்டல் பயிற்சியையும் பெற்றுக்கொண்டார்கள்.இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ், பெரண்டினா தொழில் வள நிலையத்தின் மாவட்ட முகாமையாளர் சௌந்தரராசா தினேஸ், திட்ட அலுவலர் ஆர். கப்ரியல், மட்டக்களப்பு கல்வி வலய உதவித் திட்டப் பணிப்பாளர் வை. சி. சஜீவன், மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக் கல்லூரி அதிபர் கே. பிறேமரஞ்சன், திட்ட அலுவலர் எஸ். சுமேதா டில்ஷானி, போதனாசிரியர் பாலசிங்கம் உமைபாலா, வளவாளர் அழகையா ஜெகநாதன் உட்பட பயனாளிகளான மாணவர்கள்., பெற்றோர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.