NFGG ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச கண்வைத்திய முகாமும் சத்திர சிகிச்சையும்.


(எம்.பஹ்த் ஜுனைட்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஏற்பாட்டில் "அதாலா" நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இலவச கண் வைத்திய முகாமும் சத்திர சிகிச்சையும் 20 ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜுமைறா பெலஸ் இல் இடம்பெற்றது.



கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ILM.றிபாஸ் தலைமையில் விஷேட கண் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்ட இவ் இலவச வைத்திய முகாமில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் இவ் வைத்திய முகாமில்  சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இலவசமாக   மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ILM.றிபாஸ் தெரிவித்தார்..


இவ் வைத்திய முகாமில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.