சமூக நல கல்வி அபிவிருத்தி அமைப்பினால் பாதணிகள் வழங்கி வைப்பு



விசேட  நிருபர்.

காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய மாணவர்களின் அத்தியவசிய  தேவை கருதி வித்தியாலய அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காத்தான்குடி சமூக  நல  கல்வி அபிவிருத்தி  அமைப்பினால் பாதணிகள்  அண்மையில்  வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதியாக  சமூக  நல  கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர், பிரபல சமூக சேவையாளர்  என்.எம்.எம்.பாயிஸ் ஜே.பீ  கலந்து கொண்டார்.

பாடசாலை அதிபர் திருமதி அஜீறா கலீல்தீன் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் சமூக  நல  கல்வி அபிவிருத்தி அமைப்பின்  செயலாளர் ஊடகவியலாளர் ஏ.எல்.டீன்பைரூஸ், தொழிலதிபர் எம்.எம்.லரீப், ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக்  குழு உறு்ப்பினர்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.