ஸ்ரீரா பௌண்டேஷன் ஊடாக நுவரரெலியா மாவட்ட பள்ளிவாசல்களுக்கு அல் குர்ஆன் வழங்கி வைப்பு




நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக 6ஆயிரம் குர்ஆன் பிரதிகள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வு கொட்டகலை ஊடக வளாக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. கலந்து கொண்டதுடன், மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், மாகாண விவசாய அமைச்சருமான எம்.ராமேஸ்வரன், இ.தெ.க. பொதுச் செயலாளர் அனுஷா சிவாராஜா, பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கனபதி கனகராஜ், பிலிப்குமார், சிவஞானம் மற்றும் இ.தெ.க. தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இ.தெ.க. தலைவர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மலையகத்திலுள்ள  பள்ளிவாசல்கள், மந்தரஸாக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வான முயற்சிகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.