உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு




உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று சனிக்கிழமை காத்தான்குடி  பொது மக்கள் மகத்தான வரவேற்பு அளித்ததுடன், அவரை பாராட்டி கௌரவித்தனர். 


உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதை  பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி நகர சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காத்தான்குடி  மத்திய குழு, உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில்  காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலமாக்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பல தரப்பினாலும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  


உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது பொதுச் சபைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை மக்காவில் நடைபெற்றது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் அங்கு தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார். இலங்கை வரலாற்றில் முன்னாள் சபாநாயாகர் எம்.எச்.முஹம்மட்டுக்கு பின்னர் இப்பாரிய பொறுப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.