காத்தான்குடியில் இலவச கண் வைத்திய முகாம் -2018
அதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண்வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருக்கும் இலவச கண் வைத்திய முகாம் எதிர்வரும் 20.10.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி ஜுமைரா பீச் பலஸில் நடைபெறவுள்ளது. 

இவ்விசேட கண் வைத்திய முகாமிற்காக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.ILM. றிபாஸ் அவர்களின் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவினர் குறித்த தினம் காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளனர். இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெறுவதற்கான கண் நோயாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, அவர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் ஏற்பாடுகள்  பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளிடமிருந்து பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரிக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இவ்வைத்திய முகாமில் காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுள்ள காங்கயனோடை, பாலமுனை, ஒள்ளிக்குளம். மஞ்சந்தொடுவாய் அடங்கலாக ,ஓட்டமாவடி உட்பல பல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 450 கண் நோயாளர்கள் சிகிச்சை பெறவுள்ளனர்.

முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ள இக்கண்சிகிச்சை வைத்திய முகாம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சமூக சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.