தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லையா....?


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்களுக்கு தேசிய ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத அடையாள அட்டைகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய ஆள் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத சாதாரண தர பரீட்சாத்திகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பரீட்சாத்திகளைக் கேட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.