சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ள முகம்மட் நிஷாம்தீன் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன்.


- GK -

அவுஸ்திரேலியா பல்கலை கழகத்தில் கல்வி பயின்று வந்த இலங்கையைச் சேர்ந்த முகம்மட் நிஷாம் (25) என்ற மாணவன்  தீவிரவாத தாக்குதல்  தொடர்பான ஆவணங்களை தம்வசம் வைத்திருந்தார்  என்ற குற்றச்சாற்றின் பெயரில் கடந்த 30-ம் திகதி சிட்னி நகரில் வைத்து  பொலிசாரால்  கைது   செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முகம்மட் நிஷாமுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் பினை வழங்க அவுஸ்திரேலிய நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

மாணவன் முகம்மட் நிஷாம் விளையாட்டுத் துறை  அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்பதுடன்  தான் தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி இது விடயத்தில் அரசாங்கத்தின் ஆதரவை பெறப்போவதில்லை என்றும்  முகம்மட் நிஷாமின் கைது தொடர்பில் தனது குடும்ப உறவினர் ஆழ்ந்த கவலையில் உள்ளதாக விளையாட்டுத் துறை  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.