பிரதியமைச்சர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல் உலூம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களுக்கு பிரதான நுழைவாயில்


தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் மற்றும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயங்களின் பிரதான நுழைவாயில் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி அதிபர்கள் தலைமையில் நேற்று இடம்பெற்ற அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வுகளில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் ஆலோசனையின் பிரகாரம் அவரது இணைப்பாளர்களான முன்னாள் அதிபர் சயீட், சக்கூர், கல்குடா பிரதேச இணைப்பாளர் சபீக், முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான கபூர், மாஜிதா ஆகியோர் கலந்து கொண்டு நுழைவாயில்களுக்கான அடிக்கற்களை நட்டு வைத்தனர்.

கல்குடா பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு, வீதி அபிவிருத்தி என பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தனது தொடர் பங்களிப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.