முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).

(NFGG ஊடகப் பிரிவு)

தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டத்தில் (MMDA) சீர்திருத்தம் அவசியம் என்பதற்கான கால, சூழ்நிலைத் தேவைகள் உள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த வகையில் இஸ்லாமிய சட்ட வரன்முறைக்கு அமைய,  பரந்த நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் 
என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கருதுகிறது.

காதி நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள இடைவெளிகள், தவறுகள் சீர்செய்யப்பட வேண்டும். இவை மிகவும் கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலர் - குறிப்பாக பெண்கள் - முன்வைத்து வரும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் அனைவரின் முன்னேயும் உள்ளது.

எனினும், துறை சார்ந்தோரிடம் இது குறித்து அபிப்பிராய பேதங்கள் நிலவி வருவதால், சிக்கலும் இழுபறியும் தோன்றியுள்ளது தெரிந்ததே.

2009 இல் நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வளவு காலதாமதமாக வெளிவந்துள்ளதன் பின்னணியில் உள்ள உள்ளார்ந்த விடயங்களுக்கான தார்மீகப் பொறுப்பும் அனைவரையும் சாரும்.
பாதிப்புக்குள்ளானோரைக் கருத்தில் கொண்டாவது, இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். 

இது இவ்வாறிருக்க, இந்த ஆலோசனைக் குழுவினர் மத்தியில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. அவை இரு வேறு அறிக்கைகளாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்விரு கத்துக்களிடையேயும் குறைந்தபட்ச பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் உரையாடலும் பொறிமுறையும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும். 

அதுவே நடைமுறையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த வல்லதாகும். இல்லாவிடின், இதில் அவசியமற்ற தாமதங்களும் இழுத்தடிப்புகளும் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இது குறித்து உலமாக்களும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி,  இணக்கப்பாடான தீர்மானத்திற்கு வர வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டிக் கொள்கிறது.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.