ரஷ்யா எம்.எம்.எம். குத்துச்சண்டையில் இரு வெள்ளிப் பதக்கம் வென்ற தோப்பூர் அஸாதை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டி கௌரவிப்பு




ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம் (Max Martial Arts ) குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்தார். 


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை இன்று புதன்கிழமை அவரது அமைச்சில் வைத்து வீரர் முஹம்மது அஸாத் மற்றும் அவரது தந்தை அப்துல் அலி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர். இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இஸ்மாயீல் மஹ்ரூப் செய்திருந்தார். 


இதன்போது, ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம். குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று இரு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்;த்த முஹம்மது அஸாதை பாராட்டி கௌரவித்த இராஜாங்க அமைச்சர், தொடர்ந்தும் சிறப்பாக விiயாட ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.  


மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தோப்பூர், பாலத்தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாத் ஆணழகன் (கட்டழகன்), பளுதூக்கல், குத்துச்சண்டை மற்றும் எம்.எம்.எம். எனப்படும் ரஷ்யா சண்டைக்கலை போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அண்மையில் ரஷ்யாவின் குரோஸ்னி மாநிலத்தில் நடைபெற்ற 22 வயதுக்குற்பட்ட 57-61 கிலோ கிராம் எடைப்பிரிவில் எம்.எம்.எம். குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை  வெற்றி பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.