முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை



ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு நடைமுறையில் காணப்படுகின்ற அரசியலமைப்பு முறைக்கமையஇ எந்தவித தடையும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. நாட்டில் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த வரலாற்றை நோக்குமிடத்து புதிதாக கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்ட சீர்திருத்தத்திற்கமைய ஒரு ஜனாதிபதியின் பதவிகாலம் 5 வருடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அமைவாகவேயே முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

அன்று ஜனாதிபதிஇ பிரதமர் உட்பட அரச தரப்பில் அனைத்து பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும் பொறுப்பு கொண்டிருந்ததோடு அரசியலமைப்பினூடாக பாராளுமன்றுக்குப் பொறுப்பு கூற வேண்டிய தேவை இன்மை மற்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை கொண்டிருந்தார்.

எனினும்இ நடைமுறையிலுள்ள ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரமில்லை. 19ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ்இ நாட்டின் ஜனாதிபதியாகும் நபர் மீண்டும் இரண்டாவது முறையாக பதவியிலிருக்க முடியாது என 31ஆவது பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய பிரிவில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற ஜனாதிபதி பதவியும் இன்று மைத்திரிபால சிறிசேன பெற்ற பதவியும் வோறானதாகும்.

அதனை மிகத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுமிடத்து தற்போதைய ஜனாதிபதி பதவிக்குத் தேவையாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ நடைமுறையிலுள்ள ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடலாம்.

நாட்டில் ஒரு சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாக்குகளை வழங்கவும் சிலர் மஹிந்தவுக்கு வாக்குகளை வழங்கவும் தயாராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் வாக்குரிமையுள்ள அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தமது பிரதான மனித உரிமைகள் தொடர்பில் வித்தியாசமொன்றைப் பெற வேண்டும் என நான் நம்புகின்றேன் என்றார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.