முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிளின் புதிய கட்டட திறப்பு விழா

எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிள் தொழிற்பயிற்சிக் கூடத்தின் புதிய கட்டட திறப்பு விழா எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஹட்டோவிடவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் அமைப்பின் தலைவருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் தலைமையில் நடைபெறும் இத் திறப்பு விழாவில்,  அரசியல் பிரமுகர்கள்,  உலமாக்கள்கல்விமான்கள் எனப் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக் கட்டடத்தை தனவந்தரும் மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியின் தலைவருமான இல்யாஸ் அப்துல் கரீம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஜீ.சீ.ஈ சாதாரண தரஉயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ள முஸ்லிம் பெண்களுக்கான பல தொழிற்பயிற்சிகளைக் கொண்ட நிறுவனமாக கஹட்டோவிடவில் இது அமையப்பெற்றிருப்பதால் இதன்மூலம் பிரதேசத்தின் யுவதிகள் நன்மையடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.