Batticaloa Campus இல் தொழில்நுட்ப கற்கை நெறிகளை ஆரம்பிக்க SLT தலைவர் இணக்கம்!

 
Batticaloa Campus இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகள் ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , Batticaloa Campus தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். . இன்று வியாழக்கிழமை Batticaloa Campus க்கு விஜயம் செய்த டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன, அங்குள்ள நவீன வசதிகள், தொழில்நுட்பக் கூடங்களை பார்வையிட்டார். பின்னர், டெலிகொம் நிறுவனத்துக்கும் - Batticaloa Campusக்கும் இடையில் புரிந்துணர்வுடன் telecommunication உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பல்கலைக்கழகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் Batticaloa Campus உடன் இணைந்து செயற்பட இதன்போது டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.