சௌன்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவும். மின்னொளியிலான மாபெரும் கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியும்.

சௌன்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவும்.
மின்னொளியிலான மாபெரும் கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியும்.

(மு.ப.பயாஸ் அஹமட்)
மஞ்சந்தொடுவாய் சௌன்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவினையொட்டி கடந்த 06.08.2018 திங்கட்கிழமை அன்று மஞ்சந்தொடுவாய் சௌன்டஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட மாபெரும் மின்னோளியிலான கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடி பதுரியா விளையாட்டுக் கழகம் மற்றும் பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகமும் போட்டியில் பங்கேற்றது.
இப் போட்டியானது 1 - 0 என்ற அடிப்படையில் பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகம் மாபெரும் வெற்றியீட்டி வெற்றிக் கின்னத்தையும் சுவீகரித்தது. இந்நிகழ்வில் அதிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜனாப்.M.இல்மி அகமது லெப்பை JP அவர்களும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் AMM.பர்ஸாத், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஜனாப்.M.மிப்ளார், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஜனாப் NM.ரமலான் JP , காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.MSM.ஜாபிர் MBBS, மட்டக்களப்பு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான MT.பாறுக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அது மட்டுமல்லாது பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.