பதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி ஞாயிறன்று ஆரம்பம்



சவூதி கடன் உதவி மூலம் நிர்மாணிக்கப்படும் பதுளை – செங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பதியதலாவ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

அபிவிருத்திக்கான சவூதி கடன் நிதி உதவி மூலம் 9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் பதுளை செங்கலடி வீதியின் பிபிலை தொடக்கம் செங்கலடி வரையிலான 87கிலோ மீற்றர் தூரமான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பதியதலாவ நகரில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர்களான ரஞ்சித்  மத்தும பண்டார, தயா கமகே, விஜித் விஜயமுணி சொய்சா உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள்  பலரும் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.